அடுத்த படம் நிச்சயம் அவருடன்தான்- கன்பார்ம் செய்த அஸ்வத் மாரிமுத்து

ஓ மை கடவுளே படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
 

ஓ மை கடவுளே படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்து இவர் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த வெற்றி அவருக்கு ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வாழங்கியிருக்கிறது. தர்மன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஸ்வத் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசினார்.

அடுத்த படம் நிச்சயம் அவருடன்தான்- கன்பார்ம் செய்த அஸ்வத் மாரிமுத்து

அவர் பேசியபோது, அரசன் ப்படப்பிடிப்பு முடியும் அதே காலகட்டத்தில் ரஜினி அவர்களுடன் நான் இயக்கும் தர்மன் படப்பிடிப்ப்பும் நிறைவடையும். எனவே தர்மன் படத்திற்கு பிறகு நான் இயக்கும் அடுத்த படம் சிலம்பரசன் உடன்தான் இருக்கும். எஸ்டிஆர் 51 படத்திற்கான கதைப் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இது மிகச் சிறந்த படமாக அமையும். பாடல் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இந்த படம் மன்மதன் படத்தின் காலகட்டத்தில் வெளியான படங்களைப் போன்ற பாணியில் இருக்கும். இது ஒரு ஃபேண்டஸி பாணி படமாகும் என்று கூறினார்.

From Around the web