×

அடுத்தடுத்து மாஸ் காட்டும் அஸ்வின்... புதிய பட அப்டேட்....
 

 
ashwin

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலாகும் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயன், மா.கா.ப, ரியோ ராஜ், கவின், லாஸ்லியா என பட்டியல் நீள்கிறது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். எனவே, எப்படியும் அவர் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அவருக்கு திரைப்படம் வாய்ப்புகள் வர துவங்கியது.

ashwin

தற்போது ‘என்ன சொல்லப்போகிறாய்’  என்கிற புதிய படத்தில் நடிக்க அஸ்வின் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு தேஜூ அஸ்வினி, அவந்திகா என 2 ஜோடிகள்.  மேலும், இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இப்படத்தில் அஸ்வினோடு புகழும் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட காமெடி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News