×

சேப்பாக்கத்தில் அஷ்வின் போட்ட `வாத்தி கம்மிங்’ ஷோல்டர் டிராப்... வைரல் வீடியோ #INDvENG

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. 
 

இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. மூன்றாவது நாளில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் டார்கெட்டை இந்திய அணி செட் செய்ய, அந்த அணி நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது நாளான இன்று இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜாலம் காட்டவே, அந்த அணி 54.2 ஓவர்களில் 164 ரன்களில் ஆட்டமிழந்தது. கடைசி கட்டத்தில் கேமியோ காட்டிய மொயின் அலி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.


இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அஷ்வின், பேட்ஸ்மேன்களே தடுமாறிய இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து, 8 விக்கெட்டுகள் மற்றும் சதமடித்த அஷ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 


போட்டி முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் லெக் சைடில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அஷ்வின், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில் இடம்பெற்றிருக்கும் `ஷோல்டர் டிராப்’ மூவ்மெண்டைப் போட்டு அசத்த சேப்பாக்கம் மைதானம் ரசிகர்கள் கரகோஷத்தால் அதிர்ந்தது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News