Categories: Cinema News latest news

அந்த தெரு எத்தனை கோடினு கேளு.! உச்சாணி கொம்பில் தியேட்டர் ஓனர்கள்.!

கொரோனா ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அறை என வெவ்வேறு விதமாக வந்து யாரை பயமுறுத்த முடிகிறதோ இல்லையோ ஆனால் சினிமாக்காரர்களையும் தியேட்டர் அதிபர்களையும் கதி கலங்க வைத்துவிட்டது.

கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது சினிமா உலகம் தான். அதனை, நம்பியுள்ள தொழிலாளர்கள் தியேட்டர் அதிபர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், அதே நேரத்தில் சற்றுப் பொறுத்து இருந்தாலும் ஒரேடியாக உச்சாணிக் கொம்பில் ஏறி விடுகின்றனர். அதேபோல தற்போது மூன்றாவது அலை ஓய்ந்த பின்னர் பெரிய பெரிய படங்கள் எல்லாம் வரிசைகட்டி அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளது. இதனா,ல் தியேட்டர் அதிபர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

இதையும் படியுங்களேன்- என்ன செய்யுறதுனே தெரியலையே.?! தலையில் அடித்துக்கொள்ளும் தமிழ் பட நிறுவனம்.!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, ராதே ஷ்யாம், கே ஜி எஃப், விஜய் நடித்துள்ள பீஸ்ட் கமல்ஹாசன் நடிப்பில் உள்ள ‘விக்ரம்’ சிவகார்த்திகேயனின் ‘டான்’, காத்துவாக்குல 2 காதல் என தியேட்டர் அதிபர்களுக்கு இனி வாரம் வாரம் கொண்டாட்டம்தான்.

Manikandan
Published by
Manikandan