×

முரளிதரனாக நடிக்க கேட்டனர்... எனக்கு விருப்பமில்லை...டீஜே அருணாச்சலம்...

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். 

ஆனால், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. 

பாரதிராஜா, இயக்குனர் சேரன், சீனுராமசாமி மற்றும் பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த டீஜே அருணாச்சலம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். நான் இந்தியாவில் இருந்த போது 800 பட இயக்குனர்  என்னை அவரின் அலுவலகத்திற்கு அழைத்தார். சிறுவயது முத்தையா முரளிதரனாக நடிகக் வேண்டும் எனக்கூறினார். 

ஆனால், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போர் பற்றி கதையில் சித்தரிக்கப்பட்டிருந்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. என் தாய் இலங்கை தமிழர்தான். ஆனாலும், அப்படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டேன்’ என அவர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News