திரிஷாவோட திருமணம் இப்படி நடக்காது!.. அனிருத் திருமணத்தை கணித்த ஜோதிடர் பேட்டி...
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல வருடங்களாகவே நடித்து வருபவர் நடிகை திரிஷா. லேசா லேசா படத்தில் அறிமுகமாகி தற்போது வரை பல திரைப்படங்களிலும் அவர் நடித்து விட்டார். இடையில் மார்க்கெட் சரிக்கினாலும் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னால் அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
மீண்டும் விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்த தொடங்கினார். 43 வயதாகிவிட்ட திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் வருண் மணியன் என்பருடன் அதற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தமும் நடந்தது.
ஆனால் சில நாட்களிலேயே அந்த திருமணம் நின்றுவிட்டது. ஒருபக்கம் முன்னாள் நடிகர் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர் ஜோசப் விஜயுடன் இணைத்தும் திரிஷா பேசப்பட்டு வருகிறார். அரசு நிகழ்ச்சிகளை தவிர வேறு எந்த இடத்திற்கு விஜய் சென்றாலும் அங்கு அவருடன் திரிஷா செல்வதாக கூறப்படுகிறது..
ஒருபக்கம் விஜயின் மனைவி சங்கீதா அவரை விட்டு பிரிந்து செல்வதற்கு திரிஷாதான் காரணம் எனவும் கணிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல ஜோதிடர் அஸ்ட்ரோ ஜெயஸ்ரீ ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘திரிஷாவின் ஜாதகத்தின்படி அவரின் திருமணம் சடங்கு வழிபாட்டு முறைப்படி அனைவரையும் கூப்பிட்டு முறைப்படி நடப்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.. அதேபோல் விஜயும், திரிஷாவும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்’ என்று கூறியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணத்தை 10 வருடங்களுக்கு முன்பே கணித்து சொன்னவர்தான் இந்த அஸ்ட்ரோ ஜெயஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.
