Categories: Cinema News latest news

திருமணம் செய்தால் அவ்வளவுதான்!… நயன்தாராவை எச்சரித்த ஜோதிடர்….

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. எனவே, ஒரு பக்கம் பெரிய நடிகர்களின் படங்களில் டூயட் பாடினாலும், மறுபக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

nayanthara

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பல இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட துபாய் சென்று புத்தாண்டு கொண்டாடினர்.

nayanthara

நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்கிற கேள்வி பல வருடங்களாக இருவரையும் சுற்றி வருகிறது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறினார்.

nayanthara

இந்நிலையில், நயன்தாரா திருமணம் செய்து கொள்ளாமல் இழுத்துக்கொண்டே செல்வதற்கு அவரின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் காரணம் எனக் கூறப்படுகிறது. நீங்கள் திருமணம் செய்தால் இப்போதுள்ள புகழ் மங்கிவிடும். நீங்கள் அரசியலில் இணைந்து பெரிய பதவிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் திருமணம் தடுத்துவிடும். என அவர் எச்சரித்துள்ளாராம். அந்த ஜோதிடர் சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கிறார். அவரை கேட்காமல் எந்த முக்கிய விஷயத்தையும் நயன்தாரா செய்யமாட்டார் எனக் கூறுகிறார்கள்.

இதனால்தான் திருமணம் செய்வதை நயன் தள்ளி போட்டு வருவதாக அடித்து கூறுகிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா