Rajini: 2028 வரைதான் சினிமா!.. அப்புறம் ஹாஸ்பிட்டல்தான்!.. பிரபல ஜோதிடர் பகீர்!...
தமிழ் சினிமா நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமானாலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் சூப்பர்ஸ்டாராக மாறியவர்தான் ரஜினிகாந்த். 80,90களில் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. அவர்கள் இப்போதும் ரஜினியின் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல புதிய நடிகர்கள் வந்தாலும், போட்டிகள் வந்தாலும் ரஜினியின் மார்க்கெட் என்னவோ இன்னமும் குறையவில்லை. இப்போதும் 150 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார்.
அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால் இந்த படம் டேக்ஆப் ஆகவில்லை. எனவே இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகி விட்டார்.
எனவே வேறு இயக்குனரை தேடி வருகிறார்கள். இந்த படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்த படத்தை நெல்சன் இயக்குவார் என சொல்லப்படுகிறது. இது ரஜினியின் கடைசி படமாக இருக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், சினிமாவில் நடக்கும் விஷயங்களை பற்றியும் சினிமா நடிகர்களை பற்றியும் அடிக்கடி ஊடகங்களில் பேசும் ஜோதிடர் சாந்தகுமார் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘2028 வரை மட்டும்தான் ரஜினி சினிமாவில் இருப்பார். நான் சவால் விடுகிறேன். எழுதி வச்சுக்கோங்க. 2028க்கு மேல் அவர் சினிமாவில் இருக்கவே மாட்டார். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. வீட்டில் இருந்தே சிகிச்சை.. என செய்திகள் வரும்’ என பகீர் கிளப்பி இருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பே ரஜினி சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
