ஒரே கதையில் ரஜினி, சூர்யா?!.. ஆட்டய கலைக்கும் அஸ்வத் மாரிமுத்து!..

 
suriya rajini

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமைந்துவிட்டது. எனவே சூர்யா சந்தோஷமாக இருக்கிறார். சூர்யாவின் அடுத்த படமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகவுள்ளது. அதற்குப் பின் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் வெளியாகவுள்ளது. இது சூர்யாவின் 48வது திரைப்படமாகும்.

சூர்யாவின் 49வது திரைப்படத்தை ஞானவேல் ராஜா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கி தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை காட்டியவர். மேலும், ரஜினியை வைத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார்.

வேட்டையன் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்த படத்திற்காக அவர் 2 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சூர்யாவே அவருக்கு கை கொடுத்திருக்கிறார். சென்னையில் பிரபலமான 5 ரூபாய் டாக்டரின் வாழ்க்கையைத்தான் திரைப்படமாக எடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது..

ஒருபக்கம், ரஜினியை வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள புதிய படமும் 5 ரூபாய் டாக்டரை மையமாகக் கொண்டது என தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. எனவே அஸ்வத் மாரிமுத்துவும், ஞானவேல் ராஜாவும் ஒரே கதையை படமாக எடுக்கப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

Tags

From Around the web