அந்த ரஜினி & கமல் படங்கள் கலந்த கலவைதான் தர்மன்!.. ஓப்பனாக பேசிய அஸ்வத்!.

 
dharman


ரஜினியின் 173-வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தர்மன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு டெரரான மருத்துவராக இந்த படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இன்று காலை 10 மணிக்கு இந்த படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில்தான் இந்த பட விழாவில் பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ‘எல்லோரும் 5 ரூபாய் டாக்டர் கதைதான் இது என சொல்கிறார்கள்.. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.. தர்மன் என்கிற ஒரு டெரர் மருத்துவரின் கதைதான் இது.. கண்டிப்பாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அதேநேரம் பேமிலி கலந்த திரில்லர் படமாகவும் இருக்கும். எனக்கு ரஜினி சாரின் படையப்பா மிகவும் பிடிக்கும்.. அதேபோல் கமல் சாரின் வேட்டையாடு விளையாடு படம் பிடிக்கும்.. இந்த இரண்டு படங்களும் கலந்த கலவையாகத்தான் தர்மன் படம் இருக்கும்’ என்று கூறினார்..

மேலும் ‘நான் ரஜினி சார் ஃபேன் என்பதால் அவரை சந்திக்கும்போது சுலபமாக பழக முடிந்தது. ஆனால் கமல் சாரை சந்திக்கப் போகும்போது பயமாக இருந்தது. அவர் ஏதாவது கேள்வி கேட்டால் அது நமக்கு தெரியாமல் போய்விடுமோ என்று பயந்தேன். ஆனால் என்னிடம் அவர் சொன்ன முதல் வார்த்தை ‘நானே ரஜினி ரசிகர்தான்.. நாம் ஒரு ரஜினி படம் பண்ணுவோம்’ என்று சொன்னார். நான் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன்.

50 வருடங்களுக்கு மேல் இருவரும் சினிமாவில் இருந்தாலும் அவர்களின் முதல் படம் போல கருதுகிறார்கள். படம் நன்றாக வர வேண்டும் என தொடர்ந்து ரஜினி சார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.. இரவு 11 மணி ஆனாலும் ரஜினி சாரை போனில் கூப்பிட்டு  படத்தின் கதை தொடர்பாக நான் பேசுவேன்.. அவரும் எனக்கு பல ஐடியாக்களை சொல்லி வருகிறார்.. கமல் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இருவருக்கும் நன்றி’ என அஸ்வத் பேசியிருக்கிறார்.

Tags

From Around the web