தர்மனில் சிம்ரன், நயன்தாரா, ஸ்ரீலீலா, ராஷி கண்ணா.. என்னதான் நடக்குது?.. அஸ்வத் மாரிமுத்து பேட்டி...

 
dharman

ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தற்போது ரஜினியை வைத்து தர்மன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ரஜினி மருத்துவராக நடித்து வருகிறார்.

மருத்துவராக இருந்தாலும் குடும்பத்திற்காக பரபர ஆக்சன் காட்சிகளில் ஈடுபடும் மருத்துவராக ரஜினி படத்தில் கலக்கி வருகிறாராம். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்தாலும் நயன்தாரா, ராஷி கண்ணா, ஸ்ரீலீலா போன்ற பலரும் படத்தில் நடித்து வருகிறார்கள். எனவே யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் என்கிற எதிர்பார்ப்பது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எல்லோருக்கும் அழுத்தமான கதாபாத்திரம் இருக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து ‘அனைவருக்கும் ஒரு வலுவான கதை இருக்கிறது. அப்படித்தான் கதையை எழுதியிருக்கிறேன்.. எல்லா கதாபாத்திரங்களும் முக்கியமானதாக இருக்கும்.. ரஜினி சார் காலை 9 மணிக்கு வந்து இரவு 10 மணி வரை நடிக்கிறார்.. ‘ நாளைக்கு எடுக்கலாம் சார்’ என்று நானே சொன்னாலும் ‘எப்படி இருந்தாலும் நான்தானே நடிக்கப் போகிறேன்.. இன்னைக்கு எடுத்தால் என்ன.. நாளைக்கு எடுத்தால் என்ன’ என்று கேட்கிறார்.. அவரை போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை’ என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Tags

From Around the web