×

அடப்பாவிகளா! ரசிகர்களை திட்டிய ஓவியா! ஏன் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஓவியா தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஓவியா அவ்வப்போது தனது டுவிட்டர் இணையதளத்தில் ஒரே ஒரு வரியில் ஒரு டுவிட்டை
 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஓவியா தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஓவியா அவ்வப்போது தனது டுவிட்டர் இணையதளத்தில் ஒரே ஒரு வரியில் ஒரு டுவிட்டை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார் 
அதேபோல் சமீபத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்து ’வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை’ என்று பதிவு செய்தார். இதை கண்ட ரசிகர்கள் ஓவியா மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாகவும் ,சோகத்தில் இருப்பதாகவும் எண்ணிக்கொண்டு அவருக்கு சரமாரியாக ஆறுதல் கூற தொடங்கினர். நாங்கள் இருக்கின்றோம் கவலை வேண்டாம், உங்கள் கவலை எல்லாம் விரைவில் பஞ்சாக பறந்துவிடும் என்ற ரீதியில் ரசிகர்கள் பதிலளித்து ஓவியாவை ஆறுதல் செய்ய முயற்சித்தனர்

இதனைப் பார்த்த ஓவியா ’அடப்பாவிகளா நான் சொன்னது ஒரு தத்துவம், எனக்கு எதுவும் ஆகவில்லை என்று பதிவு செய்து இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் இதனையடுத்து ஓவியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அறிந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web

Trending Videos

Tamilnadu News