Idhayam Murali Box Office : ஒரு வாரத்தில் அதர்வாவின் 'இதயம் முரளி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Idhayam Murali 7 days collection

7 நாட்களில் 'இதயம் முரளி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்திருக்கும் புது படம் 'இதயம் முரளி'.

இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு கடந்த ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இதற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இதில் அதர்வாவிற்கு ஜோடியாக 'பிளாஸ்ட்' புகழ் நடிகை ப்ரீத்தி முகுந்தனும், 'டிராகன்' புகழ் நடிகை கயாடு லோஹரும் நடித்துள்ளனர். இதை ஆகாஷ் பாஸ்கரனே அவரது 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்துள்ளாராம்.

இந்த படம் கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது, இப்படம் கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் ரூ.20.26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web