Idhayam Murali Box Office : 2 நாட்களில் அதர்வாவின் 'இதயம் முரளி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 12, 2026, 08:03 IST
2 நாட்களில் 'இதயம் முரளி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் புது ரொமான்டிக் டிராமா ஜானர் படம் தான் 'இதயம் முரளி'.
இதில் ஹீரோவாக அதர்வா முரளி நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா - சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர், தமன் இசையமைத்ததுடன் முக்கிய ரோலிலும் நடித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கியிருக்கும் இப்படம் நேற்று முன்தினம் (ஜூலை 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இப்படம் டார்கெட் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.5.81 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
