Idhayam Murali Box Office : 3 நாட்களில் அதர்வாவின் 'இதயம் முரளி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 13, 2026, 08:17 IST
3 நாட்களில் 'இதயம் முரளி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தனுஷின் 'இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' போன்ற படங்களை தயாரித்தவர் 'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன்.
இவர் இயக்குநராக மாறியிருக்கும் படம் தான் 'இதயம் முரளி'. இதில் ஹீரோவாக அதர்வா நடித்துள்ளார். கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
ரொமான்டிக் டிராமா ஜானர் படமான இது கடந்த ஜூலை 10-ஆம் தேதி தியேட்டர்களில் வெளி வந்தது. இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் நாள் ரூ.2.19 கோடி மட்டுமே வசூல் செய்த இப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸில் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறது. அதன்படி கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.9.83 கோடி வசூல் செய்திருக்கிறது.
