Idhayam Murali Box Office : 4 நாட்களில் அதர்வாவின் 'இதயம் முரளி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 14, 2026, 08:17 IST
4 நாட்களில் 'இதயம் முரளி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'தள்ளிப் போகாதே' படத்துக்கு பிறகு வெவ்வேறு ஜானர்களில் படங்கள் பண்ணி வந்த நடிகர் அதர்வா 'இதயம் முரளி' படம் மூலம் மீண்டும் ரொமான்டிக் டிராமா ஜானரை கையில் எடுத்திருக்கிறார்.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியான இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார்கள். இதை பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார்.
இதில் ஃபஹத் ஃபாசில், நட்டி, தமன், ரக்ஷன், ஏஞ்சலின், அஞ்சு குரியன், 'பரிதாபங்கள்' சுதாகர் - டிராவிட் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
இப்படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது, இந்த படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.15.81 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
