Idhayam Murali Box Office : 5 நாட்களில் அதர்வாவின் 'இதயம் முரளி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Updated: Jul 15, 2026, 07:22 IST
5 நாட்களில் 'இதயம் முரளி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டில் (2026) 'வித் லவ், யூத், ஹாப்பி ராஜ்' என ரொமான்டிக் டிராமா ஜானரில் தொடர்ந்து படங்கள் வந்த வண்ணமிருக்கிறது.
இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்படும் இந்த வகை படங்கள் அவர்களுக்கும் பிடிப்பதால் லைக் போடுகிறார்கள். இப்போது இதே ஜானரில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான படம் தான் 'இதயம் முரளி'.
இதில் அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். இதை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியதுடன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டான் பிக்சர்ஸ்' மூலம் தயாரித்திருக்கிறார்.
பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் நன்றாக கல்லா கட்டி வருகிறது. அதன்படி கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.17.72 கோடி வசூலித்துள்ளது.
