Idhayam Murali Box Office : 6 நாட்களில் அதர்வாவின் 'இதயம் முரளி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Updated: Jul 16, 2026, 07:06 IST
6 நாட்களில் 'இதயம் முரளி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. கோலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் முரளி. இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.
முரளி இன்னமும் அவரது நல்ல படங்கள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இவர் 1991-ல் இயக்குநர் கதிர் இயக்கத்தில் நடித்த படம் 'இதயம்'.
இப்போது 'இதயம் முரளி' என்ற பெயரில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி ஒரு புதிய படம் வெளியாகியிருக்கிறது. இதில் ஹீரோவாக நடித்திருப்பது வேறு யாரும் இல்லை, நம்ம முரளியின் மகனும், பிரபல நடிகருமான அதர்வா தான்.
ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ள இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். இப்படம் இளசுகளிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.19.16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
