Idhayam Murali Box Office : 8 நாட்களில் அதர்வாவின் 'இதயம் முரளி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Idhayam murali

8 நாட்களில் 'இதயம் முரளி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'பாணா காத்தாடி' படம் மூலம் கோலிவுட்டில் கதையின் நாயகனாக அறிமுகமானவர் தான் அதர்வா முரளி.

அவ்வப்போது இவர் ஆக்ஷன், த்ரில்லர் ஜானர் படங்களில் நடித்தாலும், அதிகமாக ரொமான்டிக் டிராமா ஜானர் படங்களில் நடித்திருக்கிறார். அப்படி இவர் கதை கேட்டு யெஸ் சொல்லி நடித்திருக்கும் புதிய ரொமான்டிக் டிராமா ஜானர் படம் தான் 'இதயம் முரளி'.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கியுள்ளார். இதில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் என 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்த படம் இளைஞர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வருகிறது. அதன்படி கடந்த 8 நாட்களில் உலக அளவில் ரூ.21.68 கோடி வசூல் செய்திருக்கிறது.

From Around the web