ஃபஹத் ஃபாசில் காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட இதயம் முரளி டீம்!
மலையாள ஹீரோ ஃபஹத் ஃபாசிலுக்கு தமிழ்நாட்டில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இங்கு தமிழிலும் 'விக்ரம், மாரீசன், வேட்டையன், மாமன்னன்' போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார்.
ஃபஹத் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் புதிய தமிழ் படம் தான் 'இதயம் முரளி'. கடந்த ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்தில் இவர் 'சூர்யா' என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார்.
இதில் அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் நடித்துள்ளனர். இதை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
His entry meant - maximum merry for audiences 💥
— DawnPictures (@DawnPicturesOff) July 26, 2026
Special BTS of Fahadh Faasil, from #IdhayamMurali ♥️@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran #FahadhFaasil @RedGiantMovies_ @BhavanaRelease @FutureRunup @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft… pic.twitter.com/o3grpkktTF
இப்படம் இளசுகளிடம் லைக்ஸ் குவித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது, இதன் தயாரிப்பு நிறுவனமான 'டான் பிக்சர்ஸ்' எக்ஸ் தளத்தில் ஃபஹத் ஃபாசிலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.
