ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் அதர்வாவின் 'இதயம் முரளி' ட்ரெய்லர்!

 
Idhayam Murali trailer

1991-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'இதயம்'. கதிர் இயக்கியிருந்த இந்த படத்தில் கதாநாயகனாக முரளி நடித்திருந்தார். இப்போது இவரது மகன் அதர்வா 'இதயம் முரளி' என்ற தலைப்பை வைத்து புதிய படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் அதர்வாவுடன் சேர்ந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ஃபஹத் ஃபாசில், நட்டி, தமன், நிஹரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதை 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார், மனோஜ் பரமஹம்சா - சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தை வருகிற ஜூலை 10-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.

From Around the web