Categories: Cinema News latest news

தமிழே இங்க தத்தளிக்குது.! இதுல தெலுங்குக்கு போறீங்களா.?! ரசிகர்கள் மரண கலாய்.!

கோலிவுட் சினிமாவில் அறிமுகமான அதுல்யா ரவி வெகு சீக்கிரத்திலே ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் டீசண்டான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயரெடுத்த அதுல்யா அதன் பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட அடல்ட் காமெடி திரைப்படங்களில் நடித்து வேறு மாதிரி விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டார்.

தற்போது, ஜெய் நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாக இருக்கும் ‘எண்ணித் துணிக’ படம் ஒரு திகில் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில், வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். மேலும், அதுல்யா “வட்டம்” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், தெலுங்கு சினிமாவில் களமிறங்கவுள்ள நடிகை அதுல்யா ரவி, முறையாக தெலுங்கு கற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அதுல்யா ரவி , கடந்த காலமாக  தெலுங்கு சினிமாவில் முறையான கேரக்டரில் என்ட்ரி கொடுக்க கதைகளை கேட்டு வருகிறேன், அதில் ஒரு கதை நன்றாக இருக்கிறது எனறார்.

இதையும் படிங்களேன்-

ஒரு வழியாக தமிழகம் வந்தடைந்தார் ரஜினி முன்னாள் மருமகன்.!

 மேலும், இப்படத்தில் எனது கதாபாத்திரம் ஒரு சில காட்சிகள் வருவதாக இல்லாமல் படம் முழுவதும் இருக்கும் என கூறியுள்ளார். மேலும், எனக்கு தெலுங்கு தெரியாது என ஒப்புக்கொண்டார். இதன்பின், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Manikandan
Published by
Manikandan