×

இணையத்தை அதிரவைத்த அதீரா - மிரட்டும் கேஜிஎஃப் 2 போஸ்டர்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான இப்படம் பல விருதுகளை குவித்து கன்னட சினிமா உலகை பெருமையில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகர் யாஷ்  ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்பட்டு இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

 

கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை படைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான  தேசிய விருது பெற்றது.  கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளிவந்த இப்படம் பல்வேறு வெற்றிகளை குவித்தது.  

அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது.கொரோனா ஊரடங்கினாள் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. இதனால் ஸ்டுடியோவில்  இருந்தபடியே படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் KGF 2 படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்ற  வதந்தி பரவ கே.ஜி.எப் 2 நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என நடிகர் யாஷ் உறுதியளித்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று உள்ளது எனவும்  ஹம்போலே தயாரிப்பு நிறுவனம்  ”Unveiling the Brutality” ஏமாற்ற கேப்ஷனுடன் வருகிற இன்று ஜூலை 29 அன்று 10 மணிக்கு முக்கிய அப்டேட் வெளிவரும் என கூறி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என்று இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர் . இது நிச்சயம் ட்ரைலர் அப்டேட் தான் என எதிர்பார்த்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் அதற்கு ஈடாக மாசான போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் வெளியாகியுள்ள அவரது அதீரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போஸ்டர் ட்ரெண்டாகியுள்ளது.

null

From around the web

Trending Videos

Tamilnadu News