ராஜா ராணி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லி விஜய்க்கு கதை கூறி சுமார் இரண்டு வருடங்கள் காத்திருந்து தெறி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதற்கு அடுத்து அட்லியின் இயக்கம் பிடித்துப்போக தொடர்ந்து அவரது இயக்கத்தில் விஜய் நடித்து மெர்சல், பிகில் என இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அதன் மூலம் விஜய் மார்க்கெட் உச்சம் சென்றது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெகு காலமாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்தார். அவருக்கு பலரும் கதை கூறிவந்தனர். அதில் இயக்குனர் அட்லிக்கும் ஒருவர். பின்னர் அட்லீ கூறிய கதை ஷாருக்கானுக்கு பிடித்துப்போகவே அவரும் ஓகே சொல்லிவிட்டார். பிகில் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகப்போகிறது ஆனாலும் காத்திருந்து ஷாருக்கான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ.
இதையும் படியுங்களேன் – தமிழ் சினிமாவின் சோக நிலைமை.! ஒரே அறிக்கையில் ஊருக்கே வெளிச்சம் போட்டு கட்டிட்டாங்க.!
நேற்று ஷாருக்கான் நடிக்கும் இன்னொரு திரைப்படமான பதான் திரைப்படத்தில் அறிவிப்பு வீடியோ வெளியானது. அந்த சமயம் இயக்குனர் அட்லீயின் பெயர் ட்விட்டரில் பாலிவுட் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அந்த அளவுக்கு அட்லியின் முகம் பாலிவுட் வரை தெரிந்துவிட்டது.
அங்கும் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றியை அட்லி கொடுத்து விட்டால், அதற்கு அடுத்ததாக அட்லி ஹாலிவுட் வரை சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கான் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட் படங்களை இயக்குவாரா அல்லது கோலிவுட் பக்கம் வருவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…