Categories: Cinema News latest news

அட்லீக்கு ஒரு நியாயம்.! H.வினோத்துக்கு ஒரு நியாயமா.? கொந்தளித்த விஜய் ரசிகர்கள்.!

இயக்குனர் அட்லீ  படம் எப்போது வந்தாலும் அது எந்த படத்தை பார்த்து காப்பி அடிக்கப்பட்டது, இந்த காட்சி எந்த படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என அங்கம் அங்கமாக விசாரித்து கூற ஒரு கூட்டமே கிளம்பிவிடும். அந்த கூட்டம் மட்டுமல்ல சாதாரண சினிமா ரசிகன் பார்த்தல் கூட எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய சூப்பர் ஹிட் பட கதைக்கதை தான் அட்லீ படமாக்குவார் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால், உண்மையில் அவர் மட்டும் காப்பி அடிக்கவில்லை. மற்ற இயக்குனர்களும் காப்பி அடிக்கின்றனர். அதனை தைரியமாக இன்ஸ்பிரேசன் என கூறிவிடுவர்/ அவர்களுக்கு நன்றி கூறி படத்திலும் பெயர் போட்டு விடுவர்.

இதையும் படியுங்களேன் – வலிமைக்கு வந்த புத்தம் புது சிக்கல்.! கொதித்தெழுந்ந்த வழக்கறிஞர்கள்.! பகீர் கிளப்பும் பின்னணி.!

இந்நிலையில், அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் கதை, அண்ணன் போலிஸ், அவரது தம்பி. போலீஸ் தேடும் வில்லன் கும்பலில்  முக்கிய நபர். இறுதியில் அந்த தம்பியை போலீஸ் பிடித்ததா இல்லையா என்பது தான் கதை.

இதே கதை சத்யராஜ் நடித்து பி.வாசு இயக்கத்தில் வெளியான வால்டர் வெற்றிவேல் படத்தின் கதையாகும். இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் இயக்குனர் வினோத்தை கலாய்த்து வருகின்றனர். மேலும், அட்லீக்கு மட்டும் ஒரு நியாயம் , வினோத்திற்கு ஒரு நியாயமா என கேட்டு வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan