Connect with us

Cinema News

ஓசி ரோல்ஸ் ராயல்ஸ் காரில் வலம் வந்த அட்லீ.! தளபதி விஜய் கிட்ட கேட்டா உடனே கொடுத்திருப்பாரே.?!

தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் அட்லி, தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. அதன் பிறகு மீண்டும் தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணி  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில், சென்னை வந்தார் இயக்குனர் அட்லி. அதாவது நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் அட்லி, ஷாருக்கான், அட்லியின் மனைவி என அனைவரும் வந்தனர்.

இதில் திருமணத்தன்று அட்லி விலை உயர்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸில் வந்திறங்கினார். இதை பார்த்த பல சினிமா பிரபலங்களுக்கு ஆச்சர்யம். இவர் எப்போது ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினார் என்று.

இதையும் படியுங்களேன் – சிவகார்த்திகேயனுக்கு அல்வா கொடுத்த நயன்தாரா.! மேடையில் வெளிப்பட்ட சீக்ரெட் இதோ…

அதன்பிறகு, விசாரிக்கையில், அந்த கார் சென்னையில் ஒரு பிரபல தொழிலதிபருக்கு சொந்தமானது. அதனை அட்லி, நட்பு காரணமாக இரவல் வாங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாம். இதனை பார்த்த சினிமா பிரபலங்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை தனது அண்ணன் தளபதி விஜய் என்று கூறுகிறாரே? அண்ணனிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் இருக்கிறது. அவரிடம் கேட்டால் கொடுத்திருப்பார். ஏன் தொழிலதிபரிடம் வாங்கி வரவேண்டும் என்று வசைபாடி வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top