Connect with us

Cinema News

அட்லீ குழந்தைக்கு அதுக்குள்ள ஒரு வயசு ஆகிடுச்சா!.. பிறந்தநாளை எங்கே கொண்டாடுறாங்க பாருங்க!..

இயக்குனர் அட்லீ மற்றும் நடிகை பிரியா கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தளபதி விஜயுடன் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார்.

அதன் பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கயிருந்தார். கடந்தாண்டு வெளியான அந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி 2023-ம் ஆண்டு வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது.

இதையும் படிங்க: சிம்புவுக்கு முதல் 100 கோடி பட்ஜெட் படம்!.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ வருது தெரியுமா?.. ராஜ்கமல் அறிவிப்பு!

ஜவான் படத்தை இயக்குவதற்காக மும்பைக்கு சென்ற அட்லீ மும்பைக்கும் சென்னைக்கும் அடிக்கடி டிராவல் செய்து தனது மனைவியை சந்தித்து கொண்டிருந்ததாகவும் அந்த படத்தை உருவாக்கிக் கொண்டே அவரது குழந்தையையும் உருவாக்கி விட்டார் என ஷாருக்கான் சென்னையில் ஜவான் படத்தின் புரொமோஷன் போது கிண்டலாக பேசியிருந்தார்.

அட்லீயின் மனைவி பிரியாவின் சீமந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி அட்லீக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மீர் என பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் அட்லீயின் குழந்தை இன்றுடன் ஒரு வயதை கடந்து விட்டது. தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட அட்லீ பிரான்ஸ் நாட்டின் டிஸ்னி லேண்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்க எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடைசி வரை துணையாக நின்ற பவதாரிணி கணவர்… கடைசி நாளில் என்ன நடந்தது? உண்மைகளை உடைக்கும் உறவினர்

குட்டி அட்லீக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top