Thalapathy 68
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கம்மெர்சியல் இயக்குனராக திகழ்ந்து வருகிறார் அட்லி. “ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய மாபெரும் வெற்றித்திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
“ஜவான்” திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லி இயக்க சன் பிக்சரஸ் அத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு “தளபதி 68” திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கோபிசந்த் மல்லினேனி தெலுங்கில் “வின்னர்”, “கிராக்”, பாலகிருஷ்ணாவின் “வீர சிம்ஹா ரெட்டி” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர் விஜய்க்கு ஒரு கதை கூறினாராம். அந்த கதை மிகவும் பிடித்துப்போக விஜய்யும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.
சமீப காலமாக சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் ஆகியோர் தெலுங்கு இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”, தனுஷின் “வாத்தி”, விஜய்யின் “வாரிசு” ஆகிய திரைப்படங்கள் தெலுங்கு இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்கள்தான். இந்த நிலையில்தான் விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குனர் ஒருவருடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் விஜய் புராஜெக்ட்டை அட்லி எப்படி தவறவிட்டார் என்பது குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அட்லி தற்போது இயக்கி வரும் “ஜவான்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லி மீது எப்போதும் ஒரு விமர்சனம் இருக்கிறது. அதாவது அட்லி சொன்ன தேதியில் படப்பிடிப்பை முடிக்க மாட்டார் என்பதுதான்.
“ஜவான்” திரைப்படமும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமோ என்ற சந்தேகம் விஜய்க்கு இருக்கிறதாம். ஆதலால்தான் விஜய் கோபிசந்துக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம். ஒரு வேளை “ஜவான்” திரைப்படம் சொன்ன தேதிக்குள் ரிலீஸ் ஆகிவிட்டால் விஜய்யின் மனம் மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பார்த்திபன் சொன்ன பலே ஐடியா… விறுவிறுவென வேலையை தொடங்கும் “பொன்னியின் செல்வன்” படக்குழு… என்னவா இருக்கும்!
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…