The Odyssey படத்தை பாராட்டி தள்ளிய அட்லீ!
Aug 19, 2026, 13:14 IST
ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய பிரம்மாண்டமான படம் தான் 'தி ஒடிசி' (The Odyssey).
கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆன இந்த முழு படமும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் தான் ஷூட் செய்தார்கள். இதில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ராபர்ட் பேட்டின்சன், அன் ஹாதவே, ஜெண்டயா நடித்திருந்தனர்.
உலகமெங்கும் இருக்கும் நோலன் ரசிகர்களும், நம்ம 'உலக நாயகன்' கமல் ஹாசனும் ஆல்ரெடி இப்படத்தை புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/yuqwnBDZCF
— atlee (@Atlee_dir) August 19, 2026
இந்நிலையில், இன்று இந்த படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டில் டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ எக்ஸ் தளத்தில் பாராட்டி நீண்ட பதிவு போட்டிருக்கிறார். இவர் இப்போது அல்லு அர்ஜுனை வைத்து 'ராக்கா' என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.