×

எல்லாம் தளபதியால வந்த வினை... உச்சத்தில் அட்லி.. கடுப்பில் தயாரிப்பாளர்கள்

கோலிவுட்டில் நான்கே படம் செய்திருக்கும் அட்லி தான் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
 
எல்லாம் தளபதியால வந்த வினை... உச்சத்தில் அட்லி.. கடுப்பில் தயாரிப்பாளர்கள்

தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. படம் பல படங்களின் காப்பி என பலர் கலாய்த்தாலும் வசூலில் செம வெற்றியை பெற்றது. இந்த வெற்றியால் அட்லி இயக்குனராக அறியப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு தளபதி விஜயின் இரண்டாவது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. தெறி படத்திற்கு அட்லிக்கு கோடிகளில் முதல்முறையாக சம்பளம் கொடுக்கப்பட்டது.

ஓரிலகத்தில் இருந்த சம்பளம் மெர்சல் படத்தை இயக்கும் போது 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, பிகில் படத்தில் இரட்டிப்பாக 20 கோடி ரூபாய் சம்பளமானது. அட்லி மீது இருந்த பிரியத்தால் தளபதி விஜய் தான் அவருக்கு சம்பளத்தை எக்கசக்கமாக உயர்த்தி விட்டாராம். இதை தொடர்ந்து, தற்போது அட்லி ஷாருக்கானின் படத்தின் வேலைகளில் இருக்கிறார். முதல் பாலிவுட் படத்திற்கு அட்லியின் சம்பளம் மட்டும் 35 கோடி ரூபாய் எனக் கிசுகிசுக்கப்படுகிறது. 

கோலிவுட்டில் ஷங்கர் அதிகபட்சமாக இந்தியன் 2 படத்திற்கு ரூபாய் 25 கோடி வாங்கியதே அதிகபட்சமாக இருந்தநிலையில், அவரை அட்லி தற்போது சேஸ் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது கோலிவுட்டின் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் இயக்குனராக அட்லி தான் இருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News