Atlee: விஜயை எப்போதுமே பெருமையாக பேசுவதிலே அட்லீ எப்போதுமே தனி தான். அப்படி இந்தியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர். அங்கையும் விஜயின் புகழ்பாடிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தெறி படத்தில் விஜயினை இயக்கியவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பின்னர் அவரின் அடுத்த படமே சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் ஒரு ஹீரோவை இயக்கினார். அப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். படத்தில் நிறைய காட்சிகள் காப்பி எனக் கூறப்பட்டது. இருந்தும் படத்தின் வசூல் அமோகமாக இருந்தது.
இதையும் படிங்க: ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு!.. எம்.ஜி.ஆரே பாராட்டிய சிவாஜி படம்!.. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்!..
இதை தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து இரண்டு படத்தினை இயக்கி இருந்தார். இரண்டுமே ஹிட் ரகம் தான். ஆனால் அப்படமும் மற்ற மொழி படங்களில் இருந்து காப்பி எனக் கூறப்பட்டது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத அட்லீக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில், ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கி இருந்தார். படத்தில் நிறைய சர்ச்சை எழுந்தாலும் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. பான் இந்தியா படமாக ரிலீஸான இப்படம் மிகப்பெரிய ரீச் கொடுத்தது. வசூல் 1000 கோடியை தாண்டியது.
இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்க இருந்த முரட்டுக்காளை திரைப்படம்… ஒரு நொடியில் சுதாரித்த ரஜினிகாந்த்!…
சமீபத்தில் இப்படத்தில் நடித்த ஷாருக்கான் மற்றும் நயன்தாராக்கு தாதா சாகேப் பால்கே சிறந்த நடிகர் மற்றும் நடிகையர் விருது கொடுக்கப்பட்டது. அதுப்போல, அட்லீக்கு நடுவர்கள் விருதும் கொடுக்கப்பட்டது. அந்த விருது வாங்கிய போதே விஜயிற்கு நன்றி சொல்லி இருந்தார் விஜய். அதை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ கலந்து கொண்டார்.
அதில் பேசும் போது, இந்திய சினிமாவிற்கு முதலில் யாஷை யார் என்று தெரியாது. கேஜிஎஃப் திரைப்படத்தின் பின்னர் தான் அவர் சூப்பர்ஸ்டாராக மாறினார். அல்லு அர்ஜீனின் புஷ்பா, விஜயின் லியோ அவர்களை சூப்பர்ஸ்டார்களாக மாற்றியது என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு தமிழில் பதில் சொல்லியும் அசத்தி இருந்தார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…