Attacker Movie First Look: தனுஷ் மருமகனுடன் ஜோடி சேர்ந்த குஷ்பு மகள்!
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் பவிஷ் நாராயணன். நடிகர் தனுஷின் மருமகனான இவரது
Jun 6, 2026, 21:59 IST
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் பவிஷ் நாராயணன். நடிகர் தனுஷின் மருமகனான இவரது முதல் படத்தை தனுஷே இயக்கியிருந்தார். பாடல்கள் ஹிட்ட ஆகியிருந்தாலும் படம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் பவிஷ் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இந்த படத்தில் அவருடன் நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா நாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கு அட்டக்கர் (Attacker) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கிரிக்கெட், கபடி என விளையாட்டை மையமாக வைத்து வெளிவரும் படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இப்படம் வாலிபால் விளையாட்டை மையமாக் அவைத்து உருவாகிறது.
Summary:
Attacker Movie First Look released
