×

ஆத்தாடி.... உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா... நம்பவேமுடியலயேப்பா!

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. விரைவில் முன்னணி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட உதயநிதிக்கு எதிர்பார்த்த அனைத்து படங்களுமே தோல்விதான். மனிதன், கண்ணே கலை மானே  படங்கள் மட்டும் அவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது.

 

 சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த உதயநிதி கருணாநிதியின் மறைவுக்கு பின் அரசியலிலும் களம் இறங்கினார்.  தற்ப்போது திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கிடையில் தொடர்ந்து படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2002ம் ஆண்டு தனது கல்லூரி தோழி கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் இருக்கின்றனர். அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என பார்த்தவுடன் ஷாக்காகும் அளவிற்கு மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவ்வளவு ஏன்.... உதயநிதிக்கு தற்போது 42 வயது ஆகிறது என்பதே அவரது மகனை பார்த்த பிறகு தான் தெரிகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News