கடந்த வருடம் அமேசான் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் முக்கியமான ஒன்று சார்பட்டா பரம்பரை. அமேசான் OTT தளம் என்றாலே அது நடிகர்களுக்கு கம்பேக் திரைப்படம் தான் என ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ஆர்யாவிற்கு சார்ப்பாட்டவும், சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படமும், விக்ரமுக்கு மகான் திரைப்படமும் அமைந்தது என்றே கூறலாம்.
பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா திரைப்படத்தில் ஆர்யா தன் உடலை வருத்தி அதனை பயங்கரமாக மெருகேற்றி ஒரு உண்மையான குத்துசண்டை வீரரை போல தயார் ஆகி இருந்தார். அதே போல நடிப்பிலும் சற்றும் குறைவில்லாமல் நடித்திருப்பார்.
இதையும் படியுங்களேன் – #CineBreaking : வலிமை-2 ரெடி. ! கொண்டாட்டத்தின் உச்சியில் அஜித் ரசிகர்கள்.!
இந்த கதையை மெட்ராஸ் படத்திற்கு முன்பே எழுதிவிட்டதாக பா ரஞ்சித் கூறியிருப்பார். அதே போல, அண்மையில் வெளியான வெளியான செய்தி குறிப்பில், நடிகர் அட்டகத்தி தினேஷ் கூறுகையில், சார்பட்ட்டா உண்மையில் நான் செய்ய வேண்டிய திரைப்படம். அதனை அட்டகத்தி திரைப்படத்தை முடித்த பிறகு பா ரஞ்சித் என்னிடம் கூறியிருந்தார்.
அதற்காக நிறைய உழைத்து தயாராக வேண்டி இருந்தது. ஆனால் ரஞ்சித் அடுத்தடுத்து மெட்ராஸ், கபாலி என சென்றுவிட்டதால் அது நடக்காமல் போனது. அதன் பின்னர் ஆர்யா நடிப்பில் சார்பாட்டா வெளியான பின்பு அதனை பார்த்தேன். ச்ச நம்ம செய்ய வேண்டிய திரைப்படம் மிஸ் ஆகி விட்டதே என வருத்தப்பட்டிக்கிறேன் என வெளிப்படையாக கூறினார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…