Categories: latest news

நம்பி வந்து நடித்த மூன்று நடிகைகள்.. ஒரு ஹீரோ.. ஏமாற்றிய சுந்தர்சி

சுந்தர் சி எடுக்கும் படங்களில் குறைந்தது இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள் . குறிப்பாக அரண்மனை சீரியஸ் படங்களில் மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள். முதல் இரண்டு பாகமும் அப்படித்தான் இருந்தது. முதல்பாகம் சூப்பராக இருந்தது . இரண்டாம் பாகம் ஓரளவு சுமாராக இருந்தது . ஆனால் மூன்றாம் பாகமான அரண்மனை 3 படு மோசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். ரசிகர்களின் பார்வை தான் இப்படி என்றால் சினிமா விமர்சனங்களை பார்த்தால் பிரபல ஊடகங்களிலும் இப்படித்தான் இருக்கிறது .

சுந்தர் சி தன்னை நம்பி நடித்த மூன்று நடிகைகள் ஒரு ஹீரோவை முழுமையாக ஏமாற்றி விட்டார் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். இனி பேய் கதைகள் விட்டுவிட்டு வேறு ஏதாவது கதை பக்கம் போகலாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர் . விவேக் , மூன்று ஹீரோயின்கள் , ஆர்யா, யோகி பாபு யாருடைய காட்சியுமே மனதில் ஒட்டவில்லை .

அதேநேரம் மிக மோசமான காட்சி அமைப்போ , கிளாமரான விஷயங்களோ படத்தில் இல்லை என்பது ஆறுதலான விஷயம். அரண்மனை திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை சிரிக்கவைக்க வேண்டும் என்று மையப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் பெரியவர்களை துன்புறுத்தி இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை ‌.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram