Categories: Cinema News latest news throwback stories

சிவாஜிக்கு ஜோடி சாவித்திரியா?? “சத்தியமா எங்களால பார்க்கமுடியாது”… வெறுப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்…

1961 ஆம் ஆண்டு சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “பாசமலர்”. இத்திரைப்படத்தை பீம் சிங் இயக்கியிருந்தார். விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.

Pasamalar

அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் அமோக வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விடாத பார்வையாளர்களே இல்லை என கூறுவார்கள். அந்த அளவுக்கு அண்ணன்-தங்கை பாசத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இதில் அண்ணன் கதாப்பாத்திரத்தில் சிவாஜி கணேசனும் தங்கை கதாப்பாத்திரத்தில் சாவித்திரியும் நடித்திருந்தார்கள். இவர்களின் சிறப்பான நடிப்பு இத்திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக ஆக்கியது. மேலும் ரசிகர்கள் பலரும் சிவாஜியையும் சாவித்திரியையும் சொந்த அண்ணன் தங்கையாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதன் தாக்கம் அவர்களின் அடுத்த திரைப்படத்திற்கும் எதிரொலித்திருக்கிறது.

Pasamalar

அதாவது “பாசமலர்” திரைப்படம் வெளியான அதே ஆண்டில் சிவாஜி கணேசன், சாவித்திரி ஆகியோர் ஜோடியாக நடித்த “எல்லாம் உனக்காக” என்ற திரைப்படமும் வெளிவந்தது. “பாசமலர்” திரைப்படத்தில் சிவாஜி கணேசனையும் சாவித்திரியையும் அண்ணன் தங்கையாக பார்த்த ரசிகர்களுக்கு “எல்லாம் உனக்காக” திரைப்படத்தில் அவர்களை காதல் ஜோடியாக பார்க்கமுடியவில்லையாம்.

இதையும் படிங்க: ஆயிரம் பேர் முன்னாடி இருந்தும் கோவணத்தை கட்டிக்கொண்டு திரிந்த கமல்ஹாசன்… ஆண்டவர்ன்னா சும்மாவா!!

Ellam Unakkaga

ஆதலால் அத்திரைப்படத்தை ரசிகர்கள் விரும்பவில்லையாம். இதன் காரணத்தால் “எல்லாம் உனக்காக” திரைப்படம் படுதோல்வி அடைந்ததாம். அப்போது வெளிவந்திருந்த பத்திரிக்கைகள் “பாசமலர் திரைப்படத்தில் சிவாஜியையும் சாவித்திரியையும் அண்ணன் தங்கையாக பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, எல்லாம் உனக்காக திரைப்படத்தில் அவர்கள் காதல் ஜோடியாக நடித்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை” என விமர்சனங்கள் எழுதின.

Arun Prasad
Published by
Arun Prasad