×

ஆண்ட்டி என்றால் அத்தைதானே – நடிகர் ஜீவாவிடம் ரசிகர் கேட்ட சந்தேகம் !

தன்னுடைய அண்ணன் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள மிரட்சி படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் ஜீவா பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

தன்னுடைய அண்ணன் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள மிரட்சி படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் ஜீவா பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் ஆர் பி சௌத்ரியின் மகன் ஜித்தன் ரமேஷ். அதன் பின் சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவித்த அவர் முதல் முறையாக  ஆண்ட்டி ஹீரோவாக நடிக்கும் மிரட்சி. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடந்தது. அதில் ரமேஷின் சகோதரர் ஜீவா கலந்துகொண்டு பேசினார்.

அவரது பேச்சில் ‘யாருமே தோல்விப் படம் கொடுக்க வேண்டுமென நினைப்பதில்லை. எல்லோரு உண்மையாக உழைக்கிறார்கள். டர் படத்தில் ஷாருக் கான் ஷாருக் கான் ஆண்ட்டி ஹிரோவாக நடித்து வெற்றி பெற்றதைப் போல இந்த படம் ரமேஷுக்கு அமையும் என எதிர்பார்க்கிறேன். நான் கற்றது தமிழில் நடிக்கும் போது என்னுடைய கதாபாத்திரம் ஆண்ட்டி ஹீரோவா என கலை இயக்குனரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அருகில் இருந்த ரசிகர் ஒருவர் ஆண்ட்டி என்றால் அத்தைதானே எனக் கேட்டார். தமிழ்நாட்டைப் போன்ற வேறு வேறு வகையான ரசிகர்களை பார்க்க முடியாது. அவர்களைத் திருப்திப் படுத்துவது கடினம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News