ஆல்ரெடி 40 கோடி நஷ்டம்... 'AK64'-ஐ அஜித் சாரோட இணைஞ்சு 'ஆரா சினிமாஸ்' தயாரிக்கிறதா?.. விளக்கமளித்த தயாரிப்பு தரப்பு!

 
Ajith ak64 auraa cinemas

'தல' அஜித்குமார் நடித்த கடைசி படமான 'குட் பேட் அக்லி' வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. இதையடுத்து கார் ரேஸிங்கில் பிஸியாகி விட்டதால், இவரது அடுத்த படமான 'AK64' துவங்காமலே இருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் இந்த படத்தை அஜித்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், அஜித்துடன் இணைந்து இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜின் 'ஆரா சினிமாஸ்' நிறுவனம் தயாரிக்கப்போவதாக நேற்று ஒரு செய்தி வந்தது.

தற்போது, இது குறித்து 'ஆரா சினிமாஸ்' தரப்பினர் பேசுகையில் "தயாரிப்பாளர் மகேஷ் சார் சினிமாவில் என்ட்ரி ஆன போதே அஜித் சாரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவரது வாழ்நாள் லட்சியமும் அதுதான்.

ஆனா, 'AK64' படத்தை நாங்க அஜித் சாரோட இணைஞ்சு தயாரிக்கல. ஏற்கனவே, எங்கள் நிறுவனம் தயாரித்து, விநியோகம் செய்த படங்கள் மூலம் ரூ.40 கோடி நஷ்டமாகி விட்டது. பின், எங்க தயாரிப்பில் இருந்த நான்கு புதிய படங்களின் வேலைகளும் கொரோனா சமயத்திலேயே நிறுத்தப்பட்டது. இப்போது தான் அந்த நான்கு படங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து முடித்து ரிலீஸ் செய்யலாம் என ப்ளான் பண்ணியிருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

From Around the web