மணமகள் அலங்காரத்தில் அசத்திய அவந்திகா சுந்தர்... குஷ்பு பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கோவாவில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அவந்திகா, சென்னைச் சேர்ந்த ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது காதல் மற்றும் குடும்ப சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் என கூறப்படுகிறது. ஸ்ரவண், மெர்சண்ட் நேவி அதிகாரியாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவந்திகா, நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள். வெளிநாட்டில் படிப்பை முடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார். மேலும், அவந்திகா சுந்தர் தமிழில் தனுஷின் மருமகனான பவிஷுடன் அட்டக்கர் படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்னதாக, குஷ்பு மற்றும் சுந்தர் சி குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தற்போது வெளியாகியுள்ள திருமண புகைப்படங்களில் பாரம்பரிய உடையில் மணமக்கள் இருவரும் அழகாக காட்சியளிக்கின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், குஷ்பு குடும்பத்தின் இந்த மகிழ்ச்சியான தருணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
