ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் ஹிட் அடித்த திரைப்படம் அவதார். இந்தியாவிலும் இப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.
இப்பட 5 பாகங்கள் வரை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,முதல் பாகம் வெளியாகி 13 வருடங்கள் ஆகியும் 2ம் பாகம் வெளியாகவில்லை.
ஆனால், 2ம் பாகம் தண்ணீரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்தார். சமீபத்தில் இதுதான் அவதார் 2 படத்தின் டிரெய்லர் என சில வீடியோக்கள் லீக் ஆனது.
இந்நிலையில், அவதார்2 படத்தின் டிரெய்லர் வீடியோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல் ஜேம்ஸ் கேம்ரூனின் விஸ்வல் ட்ரீட் இந்த பாகத்திலும் அசத்தலாக அமைந்துள்ளது.
இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…