நரகமும் எனக்கு தலைவணங்கும்... வெளியானது Avengers Doomsday புது ட்ரெய்லர்!

 
Avengers Doomsday

ஹாலிவுட்டில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) படத்தின் வெற்றிக்கு பிறகு 'மார்வெல் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் தான் 'அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday).

இதில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதை ரூஸோ ப்ரதர்ஸ் (ஆண்டனி & ஜோ) இயக்கி வருகிறார்கள். தற்போது, இதன் புதிய ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

படத்தை வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

From Around the web