Categories: Cinema News latest news throwback stories

ஹிந்தியிலும் பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்க விட்ட ஏவிஎம்… எவ்வளவு கோடின்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க…

தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தே மிகவும் பிரபலமாக இயங்கி வந்த தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் என்பவர்தான் இந்த நிறுவனத்தை தொடங்கினார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல நட்சத்திரங்களை வைத்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறது ஏவிஎம். இவ்வாறு தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஏவிஎம் நிறுவனம், ஹிந்தியிலும் தனது அடையாளத்தை பதித்தது. ஆம்!

AVM

1958 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தை பிறந்தால் வழி பிறக்கும்”. இத்திரைப்படத்தை ஏ.கே.வேலன் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தமிழின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக திகழ்ந்தது.

Thai Piranthal vazhi pirakkum

இந்த நிலையில் இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். இந்த ஹிந்தி திரைப்படத்திற்கு “பர்கா” என டைட்டில் வைக்கப்பட்டது.

“பர்கா” திரைப்படம் 1959 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஜெகதீப், நந்தா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் கதாநாயகராக நடித்த ஜெகதீப்புக்கு ரூ. 750 சம்பளமாக தரப்பட்டதாம். ஆனால் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நந்தாவிற்கு 15,000 ரூபாய் சம்பளமாம்.

Bharka

“பர்கா” திரைப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தனர். இத்திரைப்படத்திற்கான மொத்த பட்ஜெட் என்பது ரூ.5 லட்சம். ஆனால் “பர்கா” திரைப்படம் வெளிவந்த பிறகு அத்திரைப்படத்திற்கு கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட ரூ.35 லட்சத்திற்கும் மேல் லாபம் பார்த்திருக்கிறது. இது கிட்டத்தட்ட 7 மடங்கு லாபம்.

AVM

ஏவிஎம் நிறுவனம் அக்காலத்திலேயே ஹிந்தியில் மாபெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்து செமத்தியாக லாபம் பார்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Arun Prasad