×

யோகமான சிரிப்பு நடிகரின் அட்டகாசமான படங்கள்..!

 
yo1

சில நடிகர்களுக்கு நன்றாக நடித்தால் தான் சிரிப்பு வரும். ஒரு சில நடிகர்கள் கொஞ்சம் பேசினாலே சிரிப்பு வந்து விடும். சில நடிகர்களைப் பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். இதில் 3வது ரகம் தான் யோகி பாபு. பெயருக்கேற்றாற்போல் யோகி பாபுவிற்கு யோகம் அடித்து வரும் நேரம் இது. அவர் தன் சிறு திறமையை பெரிய திறமையாக்கி வந்து கொண்டு இருக்கிறார். 

அவரது பிளஸ் பாயிண்டே அவரது முகம் தான். அதிலும் அந்த பம்பைத்தலையை யாராலும் மறக்கவே முடியாது. அதுதான் யோகிபாபுவின் அக்மார்க் பிராண்டு என்றே சொல்லலாம். வாயை அகலமாக வைத்துக்கொண்டு அவர் செய்யும் காமெடி நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடும். இவர் நடித்த படம் என்றால் தியேட்டரில் சற்று கூடுதலாக கூட்டத்தைக் காணலாம். இவரது பின்னணியைப் பார்க்கலாமா...

யோகி பாபு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான "லொள்ளு சபா" தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து இவர் தனது பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியுள்ளார்.

yo9

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பல தடைகளை கடந்து ஒரு நகைச்சுவையாளராக பிரபலமாகியுள்ள இவர், 3 முறை ஆனந்த விகடன் சார்பில் சிறந்த நகைச்சுவையாளர் விருதினை பெற்றார். பரியேரும் பெருமாள், கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்காக இவ்விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபு, 22.7.1985ல் பிறந்துள்ளார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர். தனது பள்ளி படிப்பினை ஜம்மு காஷ்மீர் நகரத்தில் கற்றுள்ளார் இவர்.

5.2.2020ல் மஞ்சு பார்கவி என்பவரை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்.

yt78

தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக 2 வருடங்கள் பயணித்துள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் இயக்குனரும், நடிகருமான அமீர் நடித்த யோகி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இப்படத்திலிருந்து இவர் யோகி பாபு என தனது பெயரினை மாற்றிக்கொண்டார்.

பல போராட்டங்களுக்கு பின்னர் யோகி திரைப்படத்தில் யாரும் கண்டறியப்படாத கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், பின்னர் பையா திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு திரைப்படத்தில் பிம்ப் ஏன்னும் கதாபாத்திரத்திலும், வேலாயுதம் திரைப்படத்தில் ஒரு கிராமத்து வாசியாகவும், பின் அட்டகத்தி, சூது கவ்வும், பட்டத்து யானை என பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள "வெளவால்" கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்திற்கு சென்று பிரபலமானது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அரண்மனை, ஜெய்ஹிந்த் 2 போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்துள்ளது. குறிப்பாக இவர் 2014-ஆம் ஆண்டு வெளியான "யாமிருக்க பயமேன்" என்ற நகைச்சுவை திகில் திரைப்படத்தில் இவரது "பண்ணி மூஞ்ஜி வாயன்" கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் பிரபலமானது.

தமிழ் சினிமாவில் தனது உருவத்தால் பல நடிகர்களால் இகழப்பட்ட யோகி பாபு, தனது விடா முயற்;சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தற்போது ஒரு முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட நாயகனாக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.

இவர் நகைச்சுவை நடிப்பில் வெளியான மான் கராத்தே, யாமிருக்க பயமேன், காக்கி சட்டை, நாலு போலீஸ{ம் நல்ல இருந்த ஊரும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ஆண்டவன் கட்டளை, ரெமோ, கோலமாவு கோகிலா, பரியேரும் பெருமாள் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக உயர்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், சில காலத்திற்கு பின்னர் நாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது முன்னணி நடிப்பில் தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா, மண்டேலா என பல படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சில படங்கள் உங்கள் பார்வைக்கு...

மண்டேலா 

2021ல் வெளியான அரசியல் நையாண்டி திரைப்படம். மடோன் அஸ்வின் என்ற புதிய இயக்குனர் இயக்கிய படம். யோகிபாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 4ல் விஜய் டிவி மூலமாகவும் மறுநாள் நெட்பிளிக்ஸ் மூலமாகவும் வெளியானது. 

தர்மபிரபு 

ths5

2019ல் வெளியான இப்படத்தின் கதாநாயகன் யோகிபாபு. முத்துக்குமரன் இயக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். நகைச்சுவை, சீரியஸ், சரித்திரம் என அனைத்தும் கலந்த படம் இது. 
காக்டெய்ல் 

கூர்க்கா 

koi

2019ல் வெளியான படம் கூர்க்கா. சாம் அன்டன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த படம். ராஜ் அரியான் இசைஅமைத்துள்ளார். படம் முழுவதும் யோகிபாபு காதல், காமெடி கலந்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார். 

பன்னி குட்டி

pann

கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது அணுசரன் முருகையா இயக்கத்தில் உருவாகும் பன்னி குட்டி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன் சேர்ந்து கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு 'முகமூடி', 'கிருமி', 'யுத்தம் செய்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் வெளியான போதே நல்ல ரீச் ஆனது. இந்நிலையில்  "பன்னி குட்டி" படத்தின் ட்ரைலர் யூடியூபில்  வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் பன்னி பிடிக்கும் நண்பராக்களாக நான்கு பேர் நடித்துள்ளனர். 

யோகி பாபுவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News