Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயன் இல்லாத அயலான்2? ஆனா அவரு தான் ஹீரோ… என்னங்க இப்படிலாம் யோசிக்கிறாங்க?

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் இரண்டாம் பாகம் குறித்து அடுத்தக்கட்ட ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அப்டேட்களும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுள்ளது.

ரவிகுமாரின் இரண்டாவது சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் அயலான். இப்படம் 2015ல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 9 வருடங்களை கடந்து தற்போது ரிலீஸ் ஆகியது. சிவகார்த்திகேயன், யோகி பாபு, பானுப்ரியா, ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். படத்தில் ஏலியன் அயலானுக்கு சித்தார்த் வாய்ஸ் கொடுத்து இருந்தார். இப்படத்திற்கு சிவகார்த்திகேயனும், சித்தார்த்தும் சம்பளமே வாங்கவே இல்லையாம்.

இதையும் படிங்க: போண்டாமணி கடனை கேப்டன் அடைச்சாரா? அதெல்லாம் இல்லைங்க.. நடிகர் சொன்ன திடுக்கிடும் தகவல்

படம் மிகப்பெரிய அளவில் நல்ல ரீச்சை கொடுத்தது. படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலேயே சிவகார்த்திகேயன் முதல் பாகம் ஹிட் கொடுக்கும் பட்சத்தில் இரண்டாம் பாகத்தினை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி, தற்போது அயலான் 2 படத்தின் அக்ரீமெண்ட் கையெழுத்து ஆகி இருக்கிறதாம். படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிக்கு மட்டும் 50 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு இருக்கிறதாம். இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது இதுவே முதல் முறையாகி இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமியின் ஆர்மி கதையிலான படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: செம கிளுகிளுப்பு.. மறுபடியும் பாக்கணும்!.. எஜமான் பட இயக்குனர் இப்படி மாறிட்டாரே!…

அது முடிந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தினை முடித்து கொண்டு அயலான் 2 டீமுடன் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினையும் ரவிகுமாரே இயக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, அயலான் ரிலீஸ் சமயத்தில் 50 கோடி தேவைப்பட்டதாம். அந்த காசை சிவகார்த்திகேயன் தான் கொடுத்து இருக்கிறார். இதில் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ் மீது சிவாவிற்கு மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

அதனால் மீண்டும் அவருக்கே எப்படி கால்ஷூட் கொடுப்பார் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது ஏற்கனவே அயலானின் முதல் பாகத்துக்கு எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து கூட இரண்டாம் பாகத்தினை முடித்துவிடலாம் எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறாராம். மேலும் விஎஃப்எக்ஸ் கம்பெனியுடன் அதுகுறித்த பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily