
Cinema News
அய்யப்பனும் கோஷியும் தமிழ் படத்தில் நானா… எல்லாம் வதந்தி பாஸ்… ஷாக்கிங் தகவலை சொன்ன முக்கிய பிரபலம்..
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த அய்யப்பனும் கோஷியும் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக வெளியான வதந்திக்கு குறிப்பிட்ட பிரபலம் தரப்பில் இருந்தே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜு மோன் மற்றும் பிருத்விராஜ் இணைந்து நடித்த வெற்றி படம் தான் அய்யப்பனும் கோஷியும். இப்படத்தினை பிரபல இயக்குனர் கே.ஆர்.சச்சிதானந்தன் இயக்கி இருந்தார். சமீபத்தில் கூட இப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

Ayyappanum koshiyum
அய்யப்பனாக நடித்த ஆதிவாசி பகுதியை சேர்ந்தவர் பிஜி. ரிடையர்டான ராணுவ வீரராக கோஷி வேடத்தில் ப்ருத்விராஜ். இருவருக்கும் நடக்கும் மோதலே படத்தின் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தினை தமிழில் ரீமேக் செய்ய பல நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்தும் எந்த நடிகர் என முடிவாக வில்லை.
இந்நிலையில், விக்ரம் மற்றும் மாதவன் இணைந்த இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் றெக்கை கட்டியது. ஆனால் என்னிடம் இப்படம் குறித்த யாரும் பேசவே இல்லை என மாதவன் தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறதாம்.

Madhavan
இனி டைரக்ஷன் பக்கமே போக மாட்டேன் என முடிவெடுத்திருக்கும் மாதவன், சரியான கதைக்காக டைரக்டரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அப்புறம் என்ன? பேசிட வேண்டியது தானே!