×

எதிர்பார்ப்பை எகிற வைத்த அய்யப்பனும் கோஷியும் ரீமேக் – நடிகர்கள் யார் தெரியுமா?

இந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் முடிவாகியுள்ளது.

 

பிருத்விராஜ் பிஜு மேனன் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட போவதாக அறிவிக்கப்பட்டது.  இரண்டு முரட்டு மனிதர்களுக்குள் ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் வாங்கியிருந்தார். இந்நிலையில் பிருத்விராஜ் மற்றும் பிஜுமேனன் அந்த கதாபாத்திரங்களில் சசிகுமாரும், சரத்குமாரும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News