×

நிம்மதியா என்னையும் ஷிவானியையும் வாழவிடுங்க... சீக்ரெட் உடைத்த அசீம்

ஷிவானியுடனான உறவு குறித்து முதல்முறையாக அசீம் மனம் திறந்து இருக்கிறார்.
 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். பெரிய எதிர்பார்ப்பில் உள்ளே வந்தவர், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் கொடுத்தார். பாலாஜியுடன் காதல் கன்டெண்ட் தவிர உருப்படியாக எதையும் செய்யாமல் இருந்தார். தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருந்த அசீம் பல நாட்களாக குவாரண்டைனில் இருந்தும் கலந்து கொள்ளவில்லை. தன்னை சிலர் தடுக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினார். அப்போதே, அது அம்மணியின் அம்மா வேலையாக தான் இருக்கும் எனக் கிசுகிசுக்கப்பட்டது.

ஷவானி அசீமுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி தீயாக பரவிய நிலையில், அசீம் இது முற்றிலும் வதந்தி என தெரிவித்து இருக்கிறார். எனக்கும் ஷிவானிக்கும் சொந்த வாழ்வில் எந்தவித தொடர்பும் இல்லை. தொழில் ரீதியான தொடர்பு மட்டும்தான் உண்டு. 

எனக்கு சமீபத்தில் தான் விவாகரத்து கிடைத்தது. அது ஷிவானிக்காக வாங்கியது இல்லை. தயவுசெய்து என்னையும் அவரையும் வாழவிடுங்க. இதுபோதுங்க எனக் குமுறி இருக்கிறார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News