மாமியாருக்காக ஆதரவாக களமிறங்கும் மதி!... என்னடா நடக்குது இங்க?

 

விஜய் தொலைக்காட்சியின் லேட்டஸ்ட் வைரல் தொடரான அழகே அழகு தொடரின் இன்றைய எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சுரேஷுக்கு மதியின் போன் க்ரூப்பில் என்ன நடந்து இருக்கும் எனத் தெரிந்துக் கொள்ள ஆசை வந்துவிடுகிறார். அவர் போனை எடுத்து பார்க்க பாஸ்வேர்ட் தெரியாமல் குழம்புகிறார். இவ பர்த்டே கூட தெரியாதே என யோசித்துவிட்டு கண்டமேனிக்கு நம்பர் போட்டு பார்க்கிறார். 

சரியாக மதி எழுந்து விட போனை வைத்துவிட்டு ரூமுக்குள் நடந்துக்கொண்டு சமாளிக்கிறார். மாமியாருக்கு திடீரென தலைவலி வந்து உயிர் போகும் வலி தருகிறது. ரூமில் லைட் போட்டு மாத்திரையை தேட அவர் கணவர் எழுந்து சத்தம் போடுகிறார். 

உன்னால் என் தூக்கம் போச்சு. போய் சூடுதண்ணி போட்டு எடுத்துட்டு வா என வேலை விடுகிறார். வலியிலும் கணவருக்கு தண்ணியை கொடுத்துவிட்டு ஹாலுக்கு வந்து உலாவி கொண்டு வலியால் துடித்து கொண்டு இருக்கிறார். 

பின்னர், மதி வெளியில் வர என்ன இங்க இருக்கீங்க எனக் கேட்க தலைவலி உயிர் போகுது என்கிறார். வாங்க டாக்டர்கிட்ட போகலாம் எனக் கேட்க இதுக்கெல்லாம் டாக்டருக்கு போ வேண்டாம் என்கிறார். மதி மாத்திரையை கொடுத்து அவருக்கு தலை பிடித்துவைத்து தூங்க வைக்கிறார். 

மலர் எழுந்து வர என்னாச்சு எனக் கேட்க இல்ல சத்தம் போடாதீங்க. நைட் ஃபுல்லா தூங்காம தலைவலில இருந்து இருககாங்க. இப்போ தான் மாத்திரை கொடுத்து தூங்க வைத்தேன் என்கிறார். மருமகள் ரெண்டு பேரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கின்றனர். 

இவங்களுக்கு பிபி செக் செஞ்சி இருக்காங்களா எனக் கேட்க இதுவரை செக் செஞ்சதே இல்லையே என்கிறார். சும்மா போனாலே பிபி செக் பண்ணுவாங்களே எனச் சொல்ல இவங்க ஹாஸ்பிட்டலுக்கே போனது இல்லையே என்கிறார் மலர்.

மாமனார் வந்து என்ன தூங்கிட்டு இருக்கா என சத்தம் போட மதி அவங்களுக்கு உடம்பு சரியில்லை. இப்போதான் தூங்கி இருக்காங்க என்கிறார். ஆனால் மாமனார் சத்தம் போட என் வீட்டுல நீ எப்படி பேசணும்னு சொல்லி கொடுக்காதே எனக் கத்திவிட்டு செல்கிறார்.

From Around the web