சித்தா நடிகையின் செம கிரைம் த்ரில்லர் படம்!.. டைரக்ட்டா இந்த ஓடிடியில் வெளியாகுதாம்!..
நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள Babita Singh Reporting படத்தின் புதிய அப்டேட்டை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. கொலை விசாரணையை மையமாகக் கொண்ட இன்வெஸ்டிகேட்டிவ் கிரைம் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் நேரடி ஒடிடி ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரைம் வீடியோ வெளியிட்ட பதிவில், “ஒரு கொலை… அதற்குப் பின்னால் காத்திருக்கும் பல ரகசியங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கொலையை விசாரிக்கச் செல்லும் காவல் அதிகாரி, அந்த விசாரணையின் போது சந்திக்கும் பல்வேறு மர்மங்களும் தனிப்பட்ட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட உண்மைகளும் கதையின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் நிமிஷா சஜயன் பபிதா சிங் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் அன்ஷுமான் புஷ்கர் மற்றும் பருண் சோப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அம்பீகா பண்டிட் இயக்கியுள்ள நிலையில், ஃபிலிம் ஸ்குவாட் புரொடக்ஷன்ஸ், ஆக்ட் த்ரீ நிறுவனத்துடன் இணைந்து இப்படைப்பை தயாரித்துள்ளது.
தற்போது இதன் வெளியீட்டு தேதியாக ஆகஸ்ட் 28, 2026 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கொலை வழக்கின் இருக்கும் மர்மங்களைத் தேடும் விசாரணை, மறுபுறம் பாபிதா சிங்கின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருக்கும் உண்மைகள் என இரண்டு வகையான கதை இருப்பதால், Babita Singh Reporting படத்தின் மீது கிரைம்-த்ரில்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.