Categories: Cinema News latest news

சிம்புவுக்கும், எனக்கும் நடந்த சண்டை உண்மையா! 16 வருட ரகசியத்தை சொன்ன பப்லு!

Simbu vs Babloo: 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ஒரு ரியாலிட்டி ஷோவை மறக்கவே முடியாது. அது ஜோடி நம்பர் 1 தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ரீச் கொடுத்தது. அதில் நடந்த வைரல் சம்பவம் குறித்து இன்று பெரிய தகவலை பப்லுவே உடைத்து இருக்கிறார்.

ஜோடி நம்பர் ஒன் சீசனில் உமா ரியாஸ் மற்றும் பப்லு பிரித்விராஜ் இணைந்து ஆடினர். அந்த ஷோவில் நடுவராக சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர். ஒரு எபிசோட்டில் பப்லு டான்ஸ் சரியில்லை என சிம்பு கூற சண்டை வெடித்தது.

இதையும் படிங்க:  நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயரை வைக்க மாட்டார்கள்!. எல்லாமே நடிப்பு.. பொங்கும் பிரபலம்..

என்னை எப்படி அவர் சொல்லலாம் என பப்லு எகிற கிட்டத்தட்ட சிம்பு உடைந்து அழவே செய்தார். எனக்கு நடிக்க தெரியாது என அப்போ அவர் சொன்ன டயலாக் இன்று வரை ட்ரெண்ட்டில் தான் இருக்கிறது. தற்போது இதுகுறித்து பேட்டியில் உமா ரியாஸும், பிரித்விராஜும் மனம் திறந்து பேசி இருக்கின்றனர். அதில், இங்கு இருக்கும் எல்லாருக்குமே ஜோடியில் நடந்தது குறித்த சந்தேகமே இருக்கும்.

அதெல்லாம் பேசி வச்சிக்கிட்டு பண்ணி இருப்பாங்க தான் நினைத்தனர். ஆனால் அது தான் உண்மை. பேசி வச்சு செய்தது தான் என்றார் பப்லு. உமா ரியாசோ அப்போ ஏன் நம்மளை ஆட விடலை எனக் கேள்வி கேட்டார். ஆடுனோமே என பப்லு கூற எது டிஸ்குவாலிஃபை பண்ணாங்களே அதுவா என நக்கல் அடித்தார்.

இதையும் படிங்க: கமல் நெப்போலியன் வேஷத்துல நடிச்சாரா? குழப்பிய மா.கா.பா!… ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கலாய் சம்பவம்

Published by
Shamily